சென்னை : வட்டார கல்வி அலுவலருக்கான, கணினி வழித் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

வட்டார கல்வி அலுவலருக்கான, கணினி வழித் தேர்வு, வரும், 14 முதல், 16ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை,www.trb.tn.nic.inஎன்ற, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஹால் டிக்கெட் நகல் எடுத்து, தேர்வு மையத்திற்கு, குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும். அத்துடன், ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த, புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை, தவறாமல் எடுத்து செல்ல வேண்டும். 

முற்பகல் தேர்வுக்கு, காலை, 7:30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்வுக்கு, 12:30 மணிக்குள்ளாகவும், தேர்வு மையத்திற்கு வர வேண்டும். கணினி வழி தேர்வுக்காக, பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், தங்கள் உள்நுழைவு மற்றும், 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி, இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம்.தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன், மீணடும் ஒரு முறை, தேர்வு மையத்தை குறிப்பிட்டு, இணையதளத்தில், ஹால்டிக்கெட் வெளியிடப்படும். அதையும் பதிவிறக்கம் செய்து தேர்வுகளை எழுத, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.