சென்னை : வட்டார கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப் பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், பி.இ.ஓ., என்ற, வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. 

இந்த தேர்வு, பிப்., 14, 15, 16ம் தேதிகளில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பிப்., 14ல் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, நேற்றே ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.பிப்., 15ல் தேர்வு எழுதுவோருக்கு, இன்றும்; பிப்., 16ல் தேர்வு எழுதுவோருக்கு, நாளையும் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் விபரங்களை, www.trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.