சென்னை: 'இஸ்ரோ'வை சுற்றி பார்த்து, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட, பள்ளி மாணவர்களுக்கு, 'இளம் விஞ்ஞானிகள்' திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோ சார்பில், 'யுவிகா' இளம் விஞ்ஞானிகள் திட்டத்துக்கான நிகழ்ச்சிகள், மே, 11 முதல், 22 வரை நடத்தப்பட உள்ளன. 

இந்த திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். வரும், 24ம் தேதி வரை, இஸ்ரோவின், www.isro.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இதை பள்ளியின், காலை வழிபாட்டு கூட்டத்தில் தெரிவித்து, அவர்களை விண்ணப்பிக்க செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள், மே மாத நிகழ்ச்சியில், இஸ்ரோவை சுற்றி பார்க்கலாம், ஆய்வகங்களை பார்வையிடலாம் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.