பிப்ரவரி 8ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனத்தை ஒட்டி கடலூரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையத்தில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த வருடம் வரும் பிப்ரவரி 8ம் தேதி 149வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.

தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி வடலூர் தெய்வ நிலையத்தில் வருகிற 7ம் தேதி கொடியேற்றம் நடைபெற இருக்கிறது.

இதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஜோதி தரிசன விழாவில் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் வடலூரில் திரள்வார்கள். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுவதையொட்டி வரும் 8ம் தேதி கடலூரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.