சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் முடிகிறது. 

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்க உள்ளது. பிளஸ் 1க்கு, மார்ச், 4; 10ம் வகுப்புக்கு மார்ச், 17ல் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, பிப்ரவரி, 2ல் துவங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும், பாட வாரியாக ஒவ்வொரு நாள் செய்முறை தேர்வை நடத்த, அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியது. அதன்படி, மாநிலம் முழுவதும், 3,000 மையங்களில் செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வு, நாளை மறுநாள் முடிகிறது. 

அரசு மற்றும் தனியார் பள்ளி களில், செய்முறை தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியலை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு விரைந்து அனுப்பும்படி, பள்ளி கல்வித் துறை மற்றும் அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.