மதுரை: மதுரையில் 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தேர்வுத்துறை இயக்குனர்உஷாராணி தலைமையில் நாளை (பிப்.,7) நடக்கிறது.

சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியில் நடக்கும் இக்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும், வினாத்தாள் வைப்பறை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட 18 மாவட்டங்களின் சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள், இணை இயக்குனர் அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.