Image result for school morning prayer activities tamilagaasiriyar

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
15-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 1033

அதிகாரம் : உழவு

 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
 தொழுதுண்டு பின்செல் பவர்.

பொருள்:

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர் கொள்ள  மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதை தவிர மாறாதது உலகில் எதுவுமில்லை.
 - கார்ல் மார்க்ஸ்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
பொன் குடத்துக்கு பொட்டு வேண்டாமா?

A clean hand wants no washing.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Alloy - உலோகக்கலவை
2. Aluminium - அலுமினியம்
3. Brass - பித்தளை
4. Bronze - வெண்கலம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. வாதாபி கொண்டான் என்ற பட்டம் பெற்றவர் யார் ?

 முதலாம் நரசிம்மன்

2. சென்னை பல்கலைக் கழகம் யாருடைய காலத்தில் தொடங்கப்பட்டது?

டல்ஹௌசி
 
✡✡✡✡✡✡✡✡
Di-syllabic words
1. ancient - an-cient
2. belive - be-live
3. business - busi-ness
4. challenge - chal-lenge

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

வான்கோழி

🐥 வான்கோழி தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும்.

🐥 பறவை இனம் என்றாலும் இதனால் பறக்க முடியாது. வேகமாகவும் ஓடாது.

🐥 இது உருவத்தில் கோழியை விடப் பெரியதாகவும், சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது.

🐥வான் கோழிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.இவை தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்று உணர்ந்தால் சத்தமாக ஒலி யெழுப்பும்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

அழகான குழந்தை

அக்பர், ஓர் நாள் பீர்பாலிடம் என் பேரன் தான் உலகிலேயே அழகானவன் என்றார். அதற்கு பீர்பால், இல்லை மன்னா, உங்கள் பேரனை விட அழகானவன் இருக்கிறான். அக்பர் என் பேரனை விடவுமா? சாத்தியமே இல்லை என்றார். உடனே பீர்பால், அரசே என்னோடு புறப்பட்டு வாருங்கள் அவனை நான் காட்டுகிறேன் என்றார்.

அக்பரும் பீர்பாலும் மாறு வேடத்தில் நகரின் ஒதுக்குப்புறத்தில் குடிசைகள் நிரம்பிய பகுதிக்கு சென்றனர். அங்கே ஒரு குழந்தை மண்புழுதியில் இறங்கி விளையாடி கொண்டு இருந்தது.

உடலெங்கும் மண் ஒட்டி, கிழிந்த ஆடை அணிந்து, ஒழுகும் மூக்கோடு இருந்த குழந்தையை அக்பருக்குக் காட்டி, இதுதான் உங்கள் பேரனை விட அழகான குழந்தை என்றார் பீர்பால்.

அக்பர் திகைத்துப் போய் இந்தக் குழந்தையா எனது பேரனை விடவும் அழகு? எனப் பீர்பாலிடம் கேட்டார்.

ஆம் அரசே! என்று அக்பரிடம் சொல்லிய மறுகணமே, பீர்பால் குழந்தையைக் கிள்ளிவிட்டு மறைவாக நின்று கொண்டார்.

பீர்பால் கிள்ளியதால் வலி தாளாமல் குழந்தை சத்தமாக அழத்தொடங்கியது.

குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டு குடிசையிலிருந்து குழந்தையின் தாய் ஓடிவந்து, அழகான சந்திரன் போல் ஒளி வீசும் என் குழந்தை ஏன் அழுகின்றது... என் செல்லக்குட்டி ஏன் அழுகின்றது என்று கேட்டுக்கொண்டே குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு சமாதானம் செய்து கொண்டே தன் குடிசைக்குள் குழந்தையை எடுத்துச்செல்கிறாள்.

பீர்பால் அக்பரை நோக்கி பார்த்தீர்களா அரசே! கலைந்த தலைமுடி, ஒழுகும் மூக்கு, உடலெங்கும் மண்புழுதியுடன் தன் குழந்தை இருந்தாலும் அந்தத்தாய்க்கு அந்தக் குழந்தை பேரழகுதான் என்ன சொல்கிறீர்கள் என்றார்.

அக்பருக்கு அழகு என்பது உள்ளத்தில் அன்போடு பார்க்கும் பார்வையில் இருப்பது என்று தெளிவுபடப் புரியவைத்தார் பீர்பால்.

ஆம் என்று ஆமோதித்துப் பரிசுகள் தந்து பீர்பாலைச் சிறப்பித்தார் அக்பர்.

நீதி :
ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை அழகு.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது என பயணத்திற்குப் பிறகு தூதர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

🔮வாட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை எட்டியுள்ளது.

🔮கொடூர கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற சீனா புதிய திட்டம்.அருகில் இருப்பவருக்கு நோய் பாதிப்பு இருக்கா? என்பதை கண்டறிய புதிய மொபைல் ஆப் ஒன்றை சீன அரசு வெளியிட உள்ளது.

🔮21-ந்தேதி தொடங்குகிறது: ‘ஈ‌ஷா’ யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா; சிறப்பு பஸ் வசதிகளுக்கு ஏற்பாடு.

🔮உலக குத்துச்சண்டை தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார், இந்திய வீரர் அமித் பன்ஹால்.

🔮டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - போர்ச்சுக்கல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து.

🔮2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.

HEADLINES
🔮Telecom dept orders telcos to clear dues by February 14 midnight.

🔮Third Indian crew onboard cruise ship off Japan tests positive for coronavirus.

🔮Drones to wipe out Pak terrorists? India says interested in acquiring US UAV that killed Iranian general.

🔮NIA's Pulwama probe almost reaches dead end as security forces gun down key conspirators.

🔮COVID-19: Chennai Port bans entry of crew from three countries.