சென்னை,:அரசு ஊழியர்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி.,யின் துறை தேர்வுக்கு, விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் தர உயர்வுக்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஜன., 5 முதல், 12 வரை துறை தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்த தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு, நேற்று, டி.என்.பி.எஸ்.சி.,யால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆட்சேபம் இருந்தால், இன்று முதல், பிப்., 4க்குள், contacttnpsc@gmail.com என்ற, இ - மெயில் முகவரியில் மனுக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.