Image may contain: outdoor

இந்திய நாட்டின் முதல் குடியரசு தினம்!

இனிய மாலை வணக்கம், வாங்க எல்லாரும் உக்காருங்க. இன்னிக்கு ஜனவரி 26ம் தேதி என்ன விசேஷம்னு யாருக்காவது தெரியுமா… அடேடே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே நம்ம நாட்டுக்கு “அறவழியிலெ சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மஹாத்மா காந்தி அவர்கள், நம்ம நாட்டு மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்த 1930ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி நாடு முழுவதும் அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாளைத்தான் இந்தியா சுதந்திரம் அடைஞ்சதுக்கப்புறம் குடியரசு தினமாகக் கொண்டாடறோம் அதாவது சுதந்திரம் நாம அடையறதுக்கு 17 வருஷத்துக்கு முன்னாடியே மஹாத்மா காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாளைத்தான் நாம் இப்போ குடியரசு நாளா கொண்டாடறோம் திரு ஜவஹர்லால் நேரு அவர்கள் 1950ம் வருஷம் இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்! இதுதான் நம் நாட்டோடொட முதல் குடியரசு நாள்”

உங்க எல்லாருக்கும் பள்ளிக்கூடம் விடுமுறை இல்லையா? ஆமா, உங்க பள்ளிக்கூடத்திலெ நம்மோட நாட்டுக் குடியரசு நாள் கொண்டாடுவாங்களே அதுக்கு நீங்க எல்லாரும் கலந்துக்கறீங்க இல்லையா நம்மோட நாட்டுக் தேசியக் கொடியை நீங்க எல்லாரும் மதிச்சு உங்க ஷர்ட்டுலெ குண்டூசியால குத்திண்டு போகணும் அப்பிடி ஷர்ட்டுலெ குண்டூசியாலெ கொடியை குத்திக்கும் போது நிதானமா உடம்புல அந்த குண்டூசி குத்தாம கொடியை ஜாக்கிறதையா குத்திக்கணும் அப்புறம் குடியரசு நாளைக் கொண்டாட ஒரு விழா வைப்பாங்க, உங்க பள்ளிக்கூட்த்திலெ இருக்கிற மைதானத்திலெ ஒரு இடத்திலே உயரமா ஒரு கொம்பு நட்டு அதிலெ நம்ம நாட்டுக் கொடியை ஏத்தி வைப்பாங்க அப்போ நீங்க எல்லாரும் ஒழுங்கா ஒரு வரிசையிலெ நின்னு.

”நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்”

அப்பிடீங்கிற தமிழ்த் தாய் வாழ்த்து பாடணும். பாட்டை பாடி விழாவை ஆரம்பிக்கணும், அப்புறம் தேசியக் கொடியை ஏத்தும்போது பாரதமாதாக்கு வணக்கம்னு சொல்லி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தணும். தேச பக்தியோட நம்ம நாட்டு தேசீய கீதத்தைப் பாடணும்.

அப்படி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி முடிஞ்சவுடனே எல்லாருக்கும் இனிப்பு கொடுப்பா, பொறுமையா வரிசையிலெ நின்னு இனிப்பை வாங்கிண்டு வரணும், ஒழுங்கில்லாம் தாறுமாறா ஓடினா ஒத்தருக்கொத்தர் முட்டிண்டு கீழே விழுந்துடுவீங்க, புறியறதா?

அதுக்கப்புறம் உங்க பள்ளிக்கூடத்திலெ யாரெல்லாம் நிறைய மார்க்கு வாங்கி நல்லாப் படிக்கிறாங்களோ அவங்களுக்கு, பாட்டுப் போட்டியிலெ பரிசு வாங்கினவாளுக்கு, கவிதைப் போட்டியிலெ பரிசு வாங்கினவாளுக்கு அப்புறம் விளையாட்டுப் போட்டிகள்ள வெற்றி பெற்றவாளுக்கெல்லாம் யாராவது பெரிய மனுஷா வந்து பாராட்டி பரிசெல்லாம் குடுப்பா, அதையெல்லாம் அவங்க பேரைச் சொல்லி கூப்புடும்போது மேடையிலெ போயி பரிசு குடுக்கறவங்களுக்கு மரியாதையா வணக்கம் சொல்லிட்டு பரிசை வாங்கிண்டு நீங்க பரிசு வாங்கக் காரணமான உங்க பள்ளிக்கூடத்துக்கும் உங்க ஆசிரியர்கள் எல்லாருக்கும் நன்றிசொல்லிட்டு வரணும்.

”எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”

அப்பிடீன்னு திருவள்ளுவர் திருக்குறள்ள சொல்லி இருக்காரில்லையா அது மாதிரி சுதந்திரம் கிடைச்சுதனாலதானே நாம் குடியரசை கொண்டாட முடியறது, அதுனால அடிமையா இருந்த நம்மோட நாட்டை பல தியாகமெல்லாம் செஞ்சு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்லணும் புரியறதா?

எல்லாருக்கும் குடியரசு தினவாழ்த்துக்கள் சொல்லாமா சொல்லுங்க பாப்போம்

பாரத நாடு வாழ்க,
பாரத மாதா வாழ்க