சென்னை ''போட்டி தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க பயிற்சி மையங்களை அரசு முறைப்படுத்த வேண்டும்'' என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டி தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. 'குரூப் - 4' தேர்வில் நடந்துள்ள முறைகேட்டின் தொடர்ச்சியாக எஸ்.ஐ. ஒருவர் தன் குடும்பத்திற்கே அரசு பணிகள் வாங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் தமிழக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். இதுபோன்ற முறைகேடுகள் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி நிறுவனங்களில் தான் ஆரம்பமாகிறது. தற்போது பயிற்சி மையங்கள் புற்றீசல் போல் பெருகி விட்டன. மோசடிகளை தடுக்க அனைத்து பயிற்சி மையங்களையும் அரசு முறைப்படுத்த வேண்டும்.குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பிப்., 15 முதல் புதிய தமிழகம் சார்பில் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். முதல் பொதுக்கூட்டம் பிப்., 15ம் தேதி திருச்சியில் நடக்கும்.ரஜினியை கண்டு எல்லோரும் பயப்படுகின்றனர்; அவர் ஒன்றும் தவறாக பேசவில்லை.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்