சென்னை :'போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வ பயிலும் வட்டங்கள் செயல்படுகின்றன. 
இவற்றில், டி.என்.பி.எஸ்.சி., உட்பட, பல்வேறு போட்டித் தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இலவசம்இப்பயிற்சி வகுப்புகளில், தேர்வுகளுக்கு தேவையான பாடக்குறிப்பு கள், புத்தகங்கள், நாளிதழ்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன், மாதிரி தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள், இலவசமாக நடத்தப்படுகின்றன.இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களில், இதுவரை, 3,888 மாணவர்கள், பல்வேறு அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில், 42 பேர் மாற்றுத் திறனாளிகள். எனவே, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க, விருப்பம் உள்ள மாணவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகவும். தொலைதுார கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், இருந்த இடத்தில் இருந்தபடி, போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய விரும்புவோர், பயன் பெற, தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளம் செயல்பாட்டில் உள்ளது


பதிவேற்றம்இந்த இணையதளத்தில், அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள், தலைப்புகள் வாரியாக, பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. பாடக்குறிப்புகள் தொடர்பான வகுப்புகள், 'ஆடியோ, வீடியோ' வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இணையதளத்தை பயன்படுத்த, 'மொபைல் ஆப்' எனும் மொபைல் போன் செயலி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். எனவே, அரசு வேலை விரும்பும் இளைஞர்கள், இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து, சேவைகளை இலவசமாக பெற்று பயன் பெறலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.