ஈரோடு :''தமிழகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, திட்டமிட்டபடி, 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில், அவர் கூறியதாவது:அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, 'நீட்' பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும்; பயிற்சி தடைபடவில்லை. இது குறித்து, அதிகம் விளக்கம் கூற இயலாது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், வகுப்புகள் தடைபட்டன.தொடர்ந்து, பொங்கல் உட்பட பல்வேறு விடுமுறைகள் வந்ததால், தடையானது. மீண்டும் வழக்கம் போல பயிற்சி தொடரும். அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வந்து, விரைவில் பயிற்சி வழங்குவர்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி மீதான முறைகேடு குறித்து, விசாரணை நடக்கிறது. அவர் மீதான நடவடிக்கையை, அரசு கண்காணிக்கிறது. அவர் மீதான ஊழல் நிரூபிக்கப்பட்டால், உரிய தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.