சென்னை :பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்., 21 முதல், ஒரு வாரத்துக்கு செய்முறை தேர்வு நடத்த, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நடப்பு கல்வியாண்டில், மார்ச்சில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு, பிப்., 21 முதல், 28ம் தேதி வரை, செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.தனி தேர்வர்களுக்கு, பிப்., 26 முதல், 28 வரையிலும், அறிவியல் பாட செய்முறை தேர்வை நடத்தலாம். தேர்வில் எந்த விதிமீறலும் இல்லாமல் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது