சென்னை :அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. காலை வழிபாட்டு கூட்டத்துக்கு முன் 15 நிமிடங்களும் மாலையில் 45 நிமிடங்களும் இந்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.இதில் பகுதி நேரமாக பணியாற்றும் இசை யோகா உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கலாம் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதேபோல பள்ளிகளில் கழிவறைகளை சரியாக பயன்படுத்தவும் இதுதொடர்பான விதிமுறைகளை பின்பற்றவும் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.