'குரூப்' - 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு, வரும், 6ம் தேதி முதல் நடத்தப்படுகிறது என, அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 2 பதவியில், 2018ம் ஆண்டுக்குரிய, 1,338 காலியிடங்களை நிரப்ப, 2018 ஆகஸ்டில் அறிக்கை வெளியிடப்பட்டு, முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 6 முதல், 30ம்தேதி வரை, நேர்காணல் நடத்தப்பட உள்ளது.இதற்கு, 2,667 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களின் விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நேர்காணலுக்கான அழைப்பாணையை, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், நேர்காணலில்பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்காதவர்களுக்கு, மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.