சென்னை, உடற்கல்வியியல், ஓவியம், தையல், இசை ஆகிய, சிறப்பு பாடங்களில், 1,325 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம், 2017, செப்., 23ல் போட்டி தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகள், 2018 ஜூனில் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின், இறுதி பட்டியல், அக்டோபரில் வெளியானது.ஆனால், இந்த முடிவுகளில் குளறுபடி உள்ளதாக, தேர்வர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது; நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. வழக்கு முடிவுக்கு வந்ததால், அடுத்த கட்ட நடவடிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் துவங்கியுள்ளது.முதற்கட்டமாக, இசை ஆசிரியர்கள் பணியில், 86 காலியிடங்களை நிரப்ப, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முடிவுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. மாறாக, புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதல் பட்டியலில் இடம் பெற்ற பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.