சென்னை, :தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது.கடந்த 2018 - 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரலில் துவங்கியது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் உள்ள அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 2..5 லட்ச ரூபாய்க்கு கீழ் வருவாய் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதன் பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் அபராதம் செலுத்த வேண்டும்.மூத்த குடிமக்கள் நேரடியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும் பிறரின் சந்தேகங்களை போக்கவும் வருமான வரி சேவை மையங்கள் இன்று செயல்படும்.

கால அவகாச நீட்டிப்பு வதந்திவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப். 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. 'அந்த தகவல் பொய்யானது அவகாசம் நீட்டிக்கப்படவில்லை' என வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய நேரடி வரி விதிப்பு வாரியமும் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தது.